ஆங்கிலம் ஒப்பொலிச் சொற்கள் (To, Two and Too)

ஆங்கிலத்தில் ஒரே மாதிரி ஒலிக்கும், ஆனால் வெவ்வேறான பொருள் தரும் சொற்களை "homophone words" சொற்கள் என்பர். தமிழில் இவற்றை "ஒப்பொலிச் சொற்கள்" என்றழைக்கப்படும்.

இங்கே எமது பயன்பாட்டில் அடிக்கடி பயன்படும் மூன்று ஒப்பொலிச் சொற்களை பாருங்கள்.

To
Two
Too

இம்மூன்று சொற்களினதும் ஒலிப்புகள் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியானவைகளாகும். இருப்பினும் இச்சொற்களின் எழுத்துக்களும், அவை தரும் பொருள்களும் முற்றிலும் வெவ்வேறானவைகளாகும்.

இனி இம்மூன்று சொற்களினதும் பயன்பாட்டைப் பார்ப்போம்.

"To" ஒரு முன்னிடைச் சொல்லாகும்.

I walked to the school.
நான் நடந்தேன் பாடசாலைக்கு.

My first visit to America.
எனது முதல் பயணம் அமெரிக்காவுக்கு.

It's seven to ten.
ஏழுக்கு பத்து. (ஏழு மணிக்கு பத்து நிமிடங்கள் இருக்கின்றன.)

"Two" ஆங்கிலத்தில் "இரண்டு" ( 2 ) எனும் எண்ணைக் குறிக்கும் சொல்லாகும்.

One, two, three...
ஒன்று, இரண்டு, மூன்று...

I have two cars
எனக்கு இரண்டு மகிழுந்துகள் இருக்கின்றன.

He has two children.
அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

"Too" எனும் சொல் "கூட, ...உம், மிகவும், அப்படியே" என பொருள் தரும் ஒரு வினையெச்சச் சொல்லாகும்.

The shirt is too tight.
இந்த சட்டை மிகவும் இறுக்கமாக இருக்கிறது.

This question is too hard for me.
இந்த கேள்வி மிகவும் கடினமானது எனக்கு.

I have two computers; My wife has two computers too.
எனக்கு இரண்டு கணினிகள் இருக்கின்றன. எனது மனைவிக்கும் இரண்டு கணினிகள் உள்ளன.

ஒப்பொலிச் சொற்கள் (homophone words) ஒரே மாதிரியான ஒலிப்புகள் உடையதாகவும், வெவ்வேறு பொருள் கொண்டவைகளாகவும் இருப்பதால், பேச்சு பயன்பாட்டின் போது அதிகம் குழப்பம் தரும் சொற்களாகும். தாய்மொழி ஆங்கிலேயருக்கே இச்சொற்களின் பேச்சு பயன்பாடு குழப்பகரமானதாம். எனவே இவ்வாறான சொற்களின் பயன்பாட்டை அறிந்து பயன்படுத்துதல் பயன் மிக்கதாகும்.

ஒப்பொலிகள் (List of homophones) பட்டியல் எதிர்வரும் பாடங்களில் எதிர்பாருங்கள்.

இந்த இடுகை ஆங்கிலம் துணுக்கள் பகுதியிலேயே வழங்கப்படுகின்றது. மேலும் துணுக்குகள்

நன்றி

அன்புடன்
அருண் HK Arun Download As PDF

2 comments:

s. nagarajan said...

ஆங்கில திறனை வளர்க்க அழகாக எங்களுக்கு தொகுத்து வழங்கி வரும் அருண் அவர்களுக்கு நன்றி.

Anonymous said...

ஆங்கில திறனை வளர்க்க அழகாக எங்களுக்கு தொகுத்து வழங்கி வரும் அருண் அவர்களுக்கு நன்றி.

Post a Comment