"ஆங்கிலம்" வலைத்தள உதவிக் குறிப்புகள்

பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு பாடங்களின் அடிப் பாகத்திலும் Download As PDF என ஒரு தேர்வு இருப்பதைப் பாருங்கள். அதன் மீது சுட்டியை வைத்து (Right Click) வலச் சொடுக்கிடுங்கள்.


Save Target As எனும் தேர்வில் சொடுக்குங்கள். கீழுள்ளவாறு சிறிய சாளரங்கள் திறக்கும்.


அவற்றில் இரண்டாவது சாளரத்தில் Save எனும் தேர்வை (அம்புக்குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.) சொடுக்குங்கள் அவ்வளவுதான். அவை தானாக உங்கள் கணனியில் சேமிக்கப்பட்டுவிடும்.

இனி உங்களுக்கு தேவையான நேரத்தில் அவற்றை பயிற்சி செய்துக்கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்துவது Google Chrome உலாவியாக இருந்தால், Download As PDF எனும் தேர்வை சொடுக்கியவுடன் அது தானாக பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிவிடும்.

முக்கியம்:

பிடிஎப் கோப்பு வடிவாக பதிவிறக்கியக் கோப்புகளை வாசிப்பதற்கு; பிடிஎப் கோப்பு வாசிப்பான் உங்கள் கணினியில் நிறுவியிருக்க வேண்டும். நிறுவிக் கொள்ளாதவர்கள், இங்கே (ADOBE READER) படத்தின் மேல் சொடுக்கி பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

குறிப்பு:

இணைய இணைப்பு குறைவானவர்கள்; இணைய இணைப்பின் போது பதிவிறக்கிக் கொண்டால், பின் இணைய இணைப்பு இல்லாதப் போது எளிதாக பயிற்சி செய்துக்கொள்ள வசதியாக இருக்கும். இணைய வசதி இல்லாதவர்கள்; இணைய வசதி இருக்கும் இடத்திற்கு சென்று உங்கள் USB யில் பதிவிறக்கி எடுத்துக்கொண்டால், பின் உங்கள் கணினி ஊடாக எளிதாக திறந்து பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

புத்தகக் குறியிட்டு வைத்துக்கொள்வது எப்படி?
-------------------------------------------------------------------------------------
இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்தை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருப்பின், இத்தளத்தினைப் புத்தகக்குறியாக இட்டுவைத்துக் கொள்ளுங்கள். இத்தளத்தினை எளிதாக அணுகக் கூடியதாக இருக்கும். (புத்தக்குறி இட்டுவைத்துக்கொள்வதற்கு ஒரு நொடி போதும்) இதனை மூன்று வழிகளில் செய்யலாம்.

1. வலைப்பதிவின் மீது சுட்டியை வைத்து வலச் சொடுக்கிடவும். ஒரு பட்டியல் தோன்றும் அதில், Add to Favorites... எனும் தேர்வில் சொடுக்கவும். இன்னுமொரு சிறிய சாளரம் திறக்கும்.


அதில் Add எனும் தேர்வில் சொடுக்கவும் அவ்வளவு தான்.

இனி உங்கள் இணையப் பயன்பாட்டின் போது, விபரப் பட்டையில் (Menu Bar), Favorites என்பதை சொடுக்கினால், புத்தக்குறியில் இத்தளம் இருக்கும். எளிதாக இந்த ஆங்கிலம் வலைப்பதிவை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.

2. நிகழ்ச்சி பட்டையில் (Menu Bar) Favorites எனும் தேர்வை சொடுக்கி Add to Favorite சொடுக்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

3. ஒவ்வொரு இடுகையின் அடிப்பாகத்திலும் காணப்படும் Add to Favorites எனும் தேர்வை சொடுக்கியும் மேலுள்ள வழிமுறைகளுடன் புத்தக்குறி இட்டுக் கொள்ள முடியும்.

ஆங்கிலப் பாடங்களை அச்சு வடிவில் பெறுவது எப்படி?
-------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு இடுகையின் அடிப்பாகத்திலும் Print எனும் தேர்வு காணப்படும். அதனை சொடுக்குங்கள். ஒரு சிறிய சாளரம் திறக்கும்.


அதில் Print என்பதைச் சொடுக்குங்கள். அவ்வளவுதான், இடுகைகள் அச்சு வடிவில் வெளிவரும்.

குறிப்பு:

அச்சு வடிவில் பெறுவதற்கு உங்கள் கணினியுடன் அச்சுப் பதிப்பான் (Printer) இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மின்னஞ்சல் வழி நண்பர்களுக்கு அறிவிப்பது எப்படி?
-------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் காணப்படும் ஏதாவது ஒரு இடுகையை; உங்கள் நண்பருக்கோ அல்லது நீங்கள் விரும்பும் ஒருவருக்கோ மின்னஞ்சல் ஊடாக அறிவிக்க விரும்பினால், இடுகையின் அடிப்பாகத்தில் Email எனும் தேர்வை சொடுக்குங்கள். சிறிய சாளரம் தோன்றும், அதில் அனுப்புனர் முகவரி, பெறுநர் முகவரி போன்றவற்றை இடுங்கள்.

Note எனும் பெட்டியில் நீங்கள் குறிப்பிட விரும்பும் தகவலை எழுதலாம்.

கடைசியில் Send எனும் தேர்வில் ஒரு சொடுக்கிடுங்கள், அவ்வளவு தான். பெறுநருக்கு இடுகையின் இணைப்பு நொடியில் சென்று விடும்.


(படத்தைப் பாருங்கள்) Send எனும் தேர்வுக்கு கீழாக ஒரு பச்சை நிற அம்புக்குறி இடப்பட்டுள்ளது. அவ்விடத்தில் காணப்படும் கூகில், யாகூ, எம்எஸ்என் போன்ற மின்னஞ்சல் சேவைகளின் அடையாளப் படங்கள் காணப்படுகின்றன. அவற்றில் உங்களுக்கு தேவையான மின்னஞ்சல் சேவையை தெரிவு செய்து அதனூடாக அனுப்பும் வசதியும் உள்ளது.

சமூக குழும தளங்களில் பகிர்ந்துக்கொள்வது எப்படி?
-------------------------------------------------------------------------------------
இத்தளத்தில் ஏதாவது ஒரு இடுகை உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்து, அதனை பேஸ் புக், டுவிட்டர், ஓர்குட் போன்ற சமுக தளங்களில் பகிர விரும்பினால் More எனும் தேர்வை சொடுக்குங்கள்.

ஒரு சிறிய சாளரம் திறக்கும்.

அதனுள் நூற்றுக் கணக்கான சமூக தளங்களிற்கான இணைப்புகள் உள்ளன. அவற்றில் நீங்கள் பகிர விரும்பும் தளத்தினை சொடுக்கி, அத்தளத்தினூடாக உங்கள் நண்பர்களுக்கு எளிதாகப் பகிரலாம்.


குறிப்பிட்டச் சொல் தொடர்பான பாடத்தை தேடிப்பெறல்
-------------------------------------------------------------------------------------
ஆங்கிலம் இலக்கணம் சார்ந்த தமிழ் அல்லது ஆங்கில சொற்கள் தொடர்பான பாடங்களை எளிதாக அணுகுவது எப்படி? அல்லது ஒரு சொல் தொடர்பான மேலதிக தகவலைப் பெறுவது எப்படி? எடுத்துக்காட்டாக: ஆங்கிலத்தில் Present Perfect என்றோ, Article என்றோ ஒரு சொல் தொடர்பான மேலதிக தகவல்களை அல்லது அச்சொல் தொடர்பான பயன்பாடுகளை உடனடியாக பெற விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம், அப்பொழுது இங்கு சென்று குறிப்பிட்டச் சொல்லை இட்டால், அச்சொல் தொடர்பான பாடம் உடனே கிடைத்துவிடும்.

தமிழ் அல்லது ஆங்கிலம் இருமொழிச் சொற்களையும் உள்ளிட்டு தேடிப் பெறலாம்.


இப்பகுதியில் இடப்பட்டிருக்கும் உதவிக் குறிப்புகள்; குறிப்பாக புதிய இணையப் பயனர்களை கருத்தில் கொண்டே இடப்பட்டுள்ளன.

நன்றி

அன்புடன்
அருண் HK Arun

Download As PDF

7 comments:

Anonymous said...

Thanks for lot of good informations. How do I read this web page in mobile? The tamil fonts are not appearing(just shows as boxes) in my Nokia N97 model.
Thanks,
cheran

Riswaan nafeela said...

நான் இன்றே தங்களது பாடங்களைப் பற்றி அறிந்தேன்

Khalifathul Meeran said...

Thank you! I'll pray U

Unknown said...

very useful information thank you

Unknown said...

உங்களது சேவை உன்னதமானது நன்றி , நான் உங்களது பயிற்சிகளை செய்து வருகிறேன் எனக்கு கிறம்மர் எல்லாம் நன்றாக புரிகிறது ஆனால் எனக்கு அந்த கிரம்மரை பயன்படுத்தி பேசுவதற்கு கொஞ்சம் கூட முடியாமல் இருக்கிறது இதற்கு ஏதாவது வழி சொல்ல முடியுமா?
hansath95@gmail.com

Unknown said...

உங்களது சேவை உன்னதமானது நன்றி , நான் உங்களது பயிற்சிகளை செய்து வருகிறேன் எனக்கு கிறம்மர் எல்லாம் நன்றாக புரிகிறது ஆனால் எனக்கு அந்த கிரம்மரை பயன்படுத்தி பேசுவதற்கு கொஞ்சம் கூட முடியாமல் இருக்கிறது இதற்கு ஏதாவது வழி சொல்ல முடியுமா?
hansath95@gmail.com

Unknown said...

i need interview conversations in tamil way...could you please help me...saranyaraj636@gmail.com...thanking you...

Post a Comment