ஆங்கிலம் மென்பொருள் பதிவிறக்கம்

ஆங்கிலம் பேசி பழகுதல் என்பது இன்றைய இணைய உலகில் எவ்வளவோ எளிதாகிவிட்டது! ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்க விரும்புவர் அல்லது பேசி பயிற்சிப்பெற விரும்புவர் எவர்களுக்காயினும் இந்த குரல் வழி மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

இந்த மென்பொருளின் பயன்பாடுகள் என்னென்ன?

ஒரு ஆங்கிலச் சொல்லை அல்லது வாக்கியத்தை, ஆங்கிலத்தில் வாசித்துப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றை தட்டச்சி வாசிப்பதற்கான (Play) அழுத்தியை அழுத்தியவுடன் அது உரத்து வாசித்துக்காட்டும். ஆண் பெண் குரல்களில் வாசிக்கும் படி கட்டளையிட்டு பயன்பெறலாம்.

இன்று பல ஆங்கில இணையத்தளங்கள் தாம் வழங்கும் செய்திகளை குரல் வழி கேட்பதற்கான வசதியையும் கொண்டுள்ளன. அவ்வாறு இல்லாத ஒரு இணையத்தளத்தின் செய்தியை வெட்டி ஒட்டி இங்கே கேட்கலாம்; கேட்டு ஆங்கிலப் பயிற்சியும் பெறலாம். பி.டி.எப், எம்.எஸ். வேர்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கொண்டு வாசிக்கமுடியும்.

குறிப்பு:

நீங்கள் எழுதிய ஆவணங்களை இந்த மென்பொருள் கொண்டு வாசித்து பயிற்சி பெறுவதானால்; முற்றுப்புள்ளி, முக்காற்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி இடவேண்டிய இடங்களில் அவற்றை சரியாக இட்டு வாசிக்கும் படி கட்டளையிடுங்கள். இல்லையெனில் இடைவிடாது ஒரே தொடராக வாசிக்கத்தொடங்கிவிடும். ஏனெனில் இந்த மென்பொருள் நிறுத்தற்குறிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு வாசிக்கக்கூடியது. நீங்கள் எழுதிய ஒரு சொல் சிலவேளை ஆங்கிலச் சொல் அல்லாத ஒரு சொல்லென்றால் அது அவற்றை சொல்லாக உணராமல் எழுத்தாக உணர்ந்து வாசிக்கும்.

பதிவிறக்கம்:

இந்த மென்பொருளை இங்கே அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளலாம். சிறிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கிக்கொண்டால் மேலும் தெளிவாகக் கேட்கும் வசதியைப் பெறலாம்.

நன்றி
அன்புடன் அருண் HK Arun Download As PDF

10 comments:

  1. உங்கள் பாடங்கள் பத்தோடு பதினொன்று என்று அல்லாமல் பாடங்களாக பலருக்கும் பயன் மிக்கதாக இருக்கிறது. உங்கள் உழைப்பில் நன்மையடைவோர் நன்றி என்று ஒரு வார்த்தையை ஏனும் சொல்லாமல், உங்கள் பதிவுகளை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அப்படியே திருடி அவர்களது ஆக்கம் போல் பதிவிடுவது நியாயமானதா? உங்கள் இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. ஆனால் இந்த இடுகையை எத்தனைப்பேர் ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? கொஞ்சம் வெட்கமில்லாமல் அவர்களது பதிவு போல் போட்டுக்கொள்கிறார்களே, நீங்கள் கண்டுக்கொள்வதில்லையா?

    ReplyDelete
  2. இங்கே பாருங்கள். இத்தனைப்பேர் திருடிப்போட்டிருக்குதுகள். இன்னும் நிறையப்பேர் இருக்கலாம்.
    ஈகரை தமிழ் களஞ்சியம்
    nithus
    Tamil IT News
    இணையத் தமிழ் உலகம்
    நண்பன் இணையம்

    ReplyDelete
  3. - Supa

    உங்கள் கருத்துரைக்கும் மீள்பதிவுகளின் இணைப்புகளுக்கும் நன்றி.

    "மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு" என்று ஒரு பதிவும் இட்டுப் பார்த்தாயிற்று. எமது தளத்திற்கான இணைப்பை வழங்கி மீள்பதிவிட்டாலும் பரவாயில்லை. என்னத்தான் செய்வது?

    ReplyDelete
  4. அருமையான ஒரு தளம்.
    உங்கள் முயற்சிக்கு பல நெஞ்சங்களின் வாழ்த்துக்களில் எனது வாழ்த்தும் உண்டு.

    ReplyDelete
  5. -blaek

    உங்கள் போன்றோரின் உளம் திறந்த வாழ்த்துக்களே எமக்கான உந்து சக்தியாகின்றன. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. GOOD EFFORT HATS OFF ARUN

    ReplyDelete
  7. நல்ல பயனுடையதாக உள்ளது

    ReplyDelete
  8. DEAR SIR
    ur aangilam.blogspot.in wep site very very usefull sir. nan ethir parkave illa .todayillerundhu two monthskkulla yappadiyavadhu kastappattu nan english katthukkven.nenga than ennoda english guru.ungala unga namea yennaikkum marakkamatten.very very thank you sir

    ReplyDelete
  9. Very good thinking! It is useful us. Thank you.

    ReplyDelete
  10. sir, really very good your service. i am very proud of you.god very
    thankful you.it is very useful to others.thanks for all.do it hurry up please.do it again and again one day it will come automatically surprise for you.

    ReplyDelete