Showing posts with label ஆங்கில அரிச்சுவடி. Show all posts
Showing posts with label ஆங்கில அரிச்சுவடி. Show all posts

ஆங்கில நெடுங்கணக்கு கற்பிப்போம் (Teach English Alphabet)

ஆங்கில நெடுங்கணக்கு (English Alphabet) என்பது ஆங்கில மொழியில் உள்ள எழுத்துக்களின் தொகுதி ஆகும். அதனை ஆங்கில அரிச்சுவடி என்றும் அழைப்பர். ஆங்கிலம் கற்பதற்கு ஆங்கில அரிச்சுவடியை முதலில் கற்றிட வேண்டும். ஆங்கில அரிச்சுவடியை எளிதாக மனதில் இருத்திக்கொள்வதற்கு நாம் பல்வேறு எளிய வழிமுறைகளை கடைப்பிடிப்போம்.

அதில் ஒன்று தான் A for Apple, B for Ball என நாம் ஆங்கிலம் கற்றக் காலத்தில் எமக்கு கற்பித்த முறையாக இருக்கும். நாம் ஆங்கிலம் கற்கத் தொடங்கிய காலத்தில் எமது ஆசிரியர்கள் எம்மனதில் எளிதாக பதிவதற்கு அவர்கள் கையாண்ட எளிய வழிமுறைகளில் ஒன்று தான் அது.

A for Apple
B for Ball
C for Cat

ஆனால் இன்றோ தொழில்நுட்பம் வளர்ந்து, கணினி நுட்பக் காலத்தில் நாம் வசிக்கிறோம். இந்த நுட்ப வளர்ச்சி என்பது கல்வித் துறையிலும் பல முன்னேற்றங்களையும் முன்னோக்கு திட்டங்களையும் கொண்டு முன்னோக்கிச் செல்கின்றது. கடந்த காலங்களில் போல் அல்லாமல் கல்விக்கு எல்லோருமே முக்கியத்துவம் கொடுக்கும் நிலை தோன்றியுள்ளது. இந்த கல்வியும் கணினி சார் வழியாக மாறிவருவதை எல்லோரும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்த கணினியுலகில் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அரிச்சுவடியை கற்பிப்பதற்கும் கணினி மற்றும் இணையம் சார் சொற்களை உள்ளடக்கி A for Apple, B for Bluetooth என சுவாரசியமாக கற்பிக்கத் தொடங்கிவிட்டனர். இது கணினி பயன்பாட்டினால் மக்கள் மனதில் பதிந்துப் போயுள்ள சொற்கள் என்பதால் எளிதாக மனதில் இருத்திக்கொள்ளவும், தம் குழந்தைகள் கணினி மற்றும் இணையம் சார் சொற்களூடாக கணினியுலகுடன் பரிச்சயம் ஆவதற்குமான எளிய நடைமுறை என்றே கூறலாம்.

இந்த முறையை நீங்களும் ஒருமுறை முயன்று தான் பாருங்களேன்.

குறிப்பிட்ட சொற்கள் தொடர்பான படங்களை இணைக்கப் பட்டிருக்கும் படக்கோப்பில் பார்க்கவும்.
A: Apple
B: Bluetooth
C: Chat
D: download
E: Email
F: Face Book
G: Google
H: Hewlettpackard
I: Iphone
J: Java
K: Kingston
L:laptop
M: Messnger
N: Nero
O: Orkut
P: Picasa
Q: QuickTime
R: Ram
S: Server
T: Touch screen
U: Usb
V: VIsta
W: Wifi
X: XP
Y: Youtube
Z: Zorpia

எப்படியோ உங்கள் குழந்தைகளுக்கு ஆங்கில அரிச்சுவடியை சுவாரசியமாக கற்பிக்க, இன்றைய கணனியுலகில் இந்த வழிமுறை எளிதாக இருக்கலாம்.

தொடர்புடைய இடுகைகள்:
ஆங்கில நெடுங்கணக்கு
ஆங்கில ஒலிக்குறிகள்

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun Download As PDF

ஆங்கில அரிச்சுவடி (English Alphabet)

"English Alphabet" 26 எழுத்துக்களை கொண்டுள்ளது. இதனை தமிழில்"ஆங்கில அரிச்சுவடி" அல்லது "ஆங்கில நெடுங்கணக்கு" என்றும் அழைப்பர்.

a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

இந்த 26 ஆங்கில எழுத்துக்களில் உயிர் எழுத்துக்கள் (vowels) ஐந்தும், மெய் எழுத்துக்கள் (consonants) இருபத்தி ஒன்றும் உள்ளன.

உயிரெழுத்துக்கள்: a e i o u
மெய்யெழுத்துக்கள்: b c d f g h j k l m n p q r s t v w x y z

ஆங்கில எழுத்துக்கள் 26 என்றாலும் அவை "கெப்பிட்டல்" (பெரிய) எழுத்துக்களாகவும் "சிம்பல்" (சிறிய) எழுத்துக்களாகவும் இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆங்கில பெரிய எழுத்துக்கள் (English Capital Letters)
ஆங்கில சிறிய எழுத்துக்கள் (English Simple Letters)

A a
B b
C c
D d
E e
F f
G g
H h
I i
J j
K k
L l
M m
N n
O o
P p
Q q
R r
S s
T t
U u
V v
X x
Y y
Z z

ஆங்கில நெடுங்கணக்கில் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன எனக் கூறப்பட்டாலும், அவற்றில் பெரிய எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள் என இரண்டு வரி வடிவங்கள் உள்ளன. எந்தெந்த இடத்தில் எந்தெந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் இருத்தி பயன்படுத்துதல் அவசியம். அதாவது, ஒரு வாக்கியத்தில் எந்த இடத்தில் பெரிய எழுத்து பயன்படும்? எந்தெந்த சொற்களில் பெரியெழுத்து முதலெழுத்தாக பயன்படும்? எந்தெந்த சுருக்கச்சொற்கள் பெரிய எழுத்தில் எழுதவேண்டும், சிறிய எழுத்தில் எழுதவேண்டும், பெரிய எழுத்தும் சிறிய எழுத்தும் கலந்து எழுதவேண்டும்? எனும் இலக்கண விதிமுறைகள் உள்ளன.

அவற்றை இப்பாடத்தில் பார்க்கவும்.

அதுமட்டுமல்ல, ஆங்கில அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஆங்கிலத்தில் உள்ள அனைத்து ஒலிப்புகளையும் ஒலிக்கவும் முடியாது. அதனை இங்கே பார்க்கவும்.

சரி! ஆங்கில அரிச்சுவடியில் உள்ள 26 எழுத்துக்களையும் ஒரே வாக்கியத்தில் உள்ளடக்க முடியுமா? அவ்வாறு 26 எழுத்துக்களும் உள்ளடங்கிய ஆங்கில வாக்கியம் உள்ளதா? அவ்வாறான வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படி அழைக்கப்படுகின்றது?

ஒரு மொழியின் அரிச்சுவடியில் உள்ள அனைத்து எழுத்துக்களும் உள்ளடங்களாக அமையப்பட்டிருக்கும் வாக்கியத்தை "Pangram" என அழைக்கப்படுகின்றது. (A pangram is a sentence that contains every letter of the alphabet.) ஆங்கில மொழியிலும் ஒரு "Pangram" வாக்கியத்தை ஒக்ஸ்போர்ட் அகராதியில் கொடுத்துள்ளார்கள். இதோ அவ்வாக்கியம்:

"The quick brown fox jumps over the lazy dog."

இணையத்தில் இதற்கான ஆதாரம்: http://www.oxforddictionaries.com/page/138

தொடர்புள்ள இடுகைகள்:

ஆங்கில மொழியின் 44 ஒலியன்கள்

இது ஒரு துணுக்குப் பாடமாகும்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun
Download As PDF