FAQ

Frequently Asked Questions (FAQ) About AANGILAM

இந்த "ஆங்கிலம்" தளம் தொடர்பாக எழும் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (அகேகே) மற்றும் அவற்றிற்கான பதில்கள்.

Email | PDF | Download

Q: பாடங்களை மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்க முடியுமா?

A: தொடர்ந்து பலர் இவ்வாறான கேள்வியை பின்னூட்டங்கள் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் கேட்கின்றனர். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாடங்களை தனித்தனியாக மின்னஞ்சலில் அனுப்ப இயலாது என்பதை கவலையுடன் அறியத்தருகின்றோம். ஆனால் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் கூகிலின் இணை சேவைகளில் ஒன்றான Google FeedBurner வசதியூடாகப் பாடங்களை மின்னஞ்சல் கொடையமாக (Email Subscriptions) பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான வசதியை நாம் இத்தளத்தில் வழங்கியுள்ளோம். நீங்கள் பதிவுசெய்துக்கொள்வதன் ஊடாக பாடங்களை உடனுக்குடன் மின்னஞ்சல் கொடையம் ஊடாகப் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை முற்றிலும் இலவசமானது.

Q: இத்தளத்தில் உள்ள பாடங்களை பதிவிறக்கிப் பயன்படுத்தலாமா?

A: நிச்சயமாக. இத்தளத்தில் உள்ள அனைத்து ஆங்கிலப் பாடங்களையும் பதிவிறக்கிப்பயன்படுத்தலாம். நீங்கள் எளிதாக பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிகொள்வதற்கான வசதியையும் வழங்கியுள்ளோம்.

Q: பிடிஎப் வடிவில் எவ்வாறு பதிவிறக்கிக்கொள்ளலாம்?

A: ஒவ்வொரு பாடத்தின் (Footer) அடிப்பாகத்திலும் Download as PDF எனும் சொற்றொடரை காணலாம். அதனைச் சொடுக்கினால் குறிப்பிட்ட பாடம் தானாக உங்கள் கணினியில் பதிவிறங்கிக்கொள்ளும். பின்னர் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் நீங்கள் உங்கள் கணினியின் ஊடாக பாடங்களை திறந்து கற்கலாம். மேலும் பார்க்க>>

Q: பிடிஎப் கோப்புகளை கணினியில் பதிவிறக்கிக்கொண்டேன். ஆனால் அவற்றை திறந்து பார்வையிட முடியவில்லை, காரணம் என்ன?

பிடிஎப் கோப்புகளை நீங்கள் பதிவிறக்கிக்கொண்டாலும், அவற்றைப் பார்வையிட உங்கள் கணினியில் அடோபி ரீடர் (Adobe Reader) நிறுவியிருக்க வேண்டும். உங்கள் கணினியில் அடோபி ரீடர் இதுவரை நிறுவப்படவில்லையெனில் முதலில் நிறுவிக்கொள்ளுங்கள். சிலவேளை உங்கள் அடோபி ரீடர் காலவதியானதாக இருந்தால் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

Q: அடோபி ரீடர் என்றால் என்ன, அதனை எவ்வாறு எனது கணனியில் நிறுவிக்கொள்வது?

A: அடோபி ரீடர் என்பது பிடிஎப் கோப்புகளை திறந்து பார்வையிட மற்றும் பயன்படுத்த உதவும் மிகவும் பயன்மிக்க ஒரு செயலி. அதனை எவ்வாறு உங்கள் கணினியில் நிறுவுதல் எனும் உதவி குறிப்புகளை இங்கே பார்க்கவும்.

Q: பாடங்களை பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்க முயன்றும் முடியவில்லை என்ன காரணம்?

A: நாம் எமது பாடங்களை பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கும் வசதியை இன்னொரு மூன்றாம் தளத்தின் சேவையூடாகவே வழங்கியுள்ளோம். சில நேரங்களில் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்படும் போதும்,  தளமேலாண்மை இடம்பெறும் போதும் நுட்பச் சிக்கல்கள் ஏற்படுவதால் பதிவிறக்கம் தடைபடுகிறது. உங்களுக்கு அவ்வாறு நிகழ்ந்தால், சற்று நேரத்தின் பின்னர் முயற்சி செய்யவும்.

Q: இதுவரை எத்தனை பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்?

A: இலட்சக் கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பதிவிறக்கங்கள் இடம்பெறுகின்றன.

Q: பிடிஎப் கோப்பு வடிவில் அல்லாமல் வேறு வழியில் நான் இந்த ஆங்கிலப் பாடங்களைப் பெறமுடியுமா?

A: முடியும், அச்சு நகல் (Print) எடுத்து பயன்படுத்தலாம். வேர்ட் சீட்டில் வெட்டி ஒட்டி (cut & paste) பயன்படுத்தவும் முடியும்.

About Lessons

Q: ஆங்கிலப் பாடங்கள் தொடர்பான ஏதெனும் சந்தேகம் அல்லது கேள்வி எழுந்தால் நான் உங்களிடம் கேட்கலாமா?

A: நிச்சயமாக கேட்கலாம். அதேவேளை நீங்கள் கேட்கப் போகும் கேள்வி ஏற்கெனவே வேறொருவரால் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்ட ஒன்றா என்பதை குறிப்பிட்ட பாடத்தின் கீழ் பின்னூட்டத்தில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டு கேட்கவும். ஏனெனில் ஏற்கெனவே பதிலளிக்கப்பட்டவை உள்ளன.

அதேவேளை பலர் தொடர்பே இல்லாத கேள்விகள்ள் பாடங்களின் கேட்டிருப்பதனையும் தளத்தில் பார்க்கலாம். அவ்வாறான கேள்விகளுக்கு நாம் பதிலளிப்பதில்லை.

Q: கேள்விக்கு தொடர்பில்லாத பாடத்தின் கீழ் கேள்வி கேட்பதால் பதிலளிக்காமைக்கு காரணம் என்ன?

A: காரணம், ஒரு பாடத்தின் கீழ் கேட்கப்படும் கேள்வி அப்பாடம் தொடர்பானதாக இருக்க வேண்டும். ஏனேனில் அவர் என்ன கேள்வி கேட்டிருக்கிறார் என்பதையும் நாம் என்ன பதிலளித்துள்ளோம் என்பதையும் பிற்காலத்தில் பின்னூட்டங்களை பார்ப்போர் புரிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். எனவே ஒரு பாடத்துடன் தொடர்பான கேள்வியாக இருந்தால் குறிப்பிட்ட அப்பாடத்தின் கீழ் மட்டுமே கேளுங்கள்.

Q: பாடங்களுடன் தொடர்பில்லாத, அதேவேளை ஆங்கிலம் தொடர்பான கேள்விகள் என்றால் எவ்வாறு கேட்கலாம்?

A: ஆங்கிலம் கேள்வி பதில் (AANGILAM Questions and Answers) பகுதியில் உள்ள பின்னூட்டத்தில் கேளுங்கள். அது எமக்கு பதிலளிக்க எளிதாக இருக்கும். அதேவேளை கேட்கும் கேள்விக்கான பதில் ஒரு பாடமாக வழங்கப்பட்டால் அங்கே அப்பாடம் பட்டியலில் இடம்பெறும். 

Q: கேட்கப்படும் கேள்விகளுக்குஉடனடியாக பதில் கிடைக்குமா?

A: அது கிடைக்கும் நேரத்தைப்பொருத்தது. ஏனேனில் நேரம் கிடைக்கும் போது மட்டுமே எமது நேரத்தை இத்தளத்தில் செலவிட முடிகிறது.  இருப்பினும் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலாக எல்லோருக்கும் பொதுவான ஒரு பாடமாகவோ ஆக்கமாகவோ வழங்கப்படும்.

Q: ஏற்கெனவே பதிலளிக்கப்பட்ட கேள்வியா என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்வது?

A: அதற்காகத்தான் இத்தளத்தில் விருப்பமை ஆங்கிலத் தேடல் பொறி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதில் உங்கள் கேள்வியின் குறிச்சொல்லை உள்ளிட்டால், அதற்கான தேடல் விடை கிடைக்கும். அதனை வைத்து நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி ஏற்கெனவே வேறுவொருவரால் கேட்கப்பட்ட ஒன்றா இல்லையா என அறிந்துக்கொள்ளலாம்.

Q: ஆங்கிலம் தேடல் பொறியில் ஆங்கிலச் சொற்களை உள்ளிட்டால் அதற்கான தேடல்விடை வரும். ஆனால் ஒரு தமிழ் சொல் தொடர்பில் எவ்வாறு தேடலாம்?

A: தமிழ் சொற்களை உள்ளிட்டு தேடினாலும் தேடலுக்கான விடை வரும்.

Q: தமிழில் தேடுவதானால் தமிழில் தட்டச்சத்தெரிய வேண்டுமே, என்ன செய்யலாம்?

A: கவலையை விடுங்கள்! அதற்காகத்தான் தமிழ்99 தட்டச்சுப் பலகை ஒன்றை இவ்வலைத்தளத்தின் அடிபாகத்தில் (footer) நிறுவியுள்ளோம். அதில் தமிழ் எழுத்துக்களின் மீது சொடுக்கி எளிதாக தமிழ் சொற்களை உள்ளிடலாம். பின்னர் அச்சொல்லை வெட்டி ஒட்டி ஆங்கிலத் தேடல் பொறியின் ஊடாக தேடலாம்.

Q: இத்தளத்தில் ஆங்கில இலக்கணம் தொடர்பான பாடங்கள் மட்டுமா வழங்கப்படுகின்றன?

A: ஆரம்பத்தில் ஆங்கில இலக்கணப் பாடங்களை  வழங்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினாலும்,  தற்போது பல்வேறு பகுப்புகளின் கீழும் பாடங்கள் வழங்கப்படுகின்றன. கீழே பார்க்கவும்:

English Grammar
English Mini Lessons
Articles About English
English History
English Pronunciation
English Conversation (Spoken English)
English Glossary Terms
English Vocabulary
English Tests
Common Mistakes in English

மேலுள்ள பகுப்புகள் மட்டுமன்றி புதிதாக "Question and Answer" எனும் கேள்வி பதில் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

Permission

Q: இத்தளத்தில் வழங்கப்படும் பாடங்களை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கான அனுமதியுண்டா?

A: இல்லை.

Q: இத்தளத்தின் பாடங்களை மீள்பதிவிடலாமா?

A: புதிதாக இணையத்திற்கு அறிமுகமாவோர் சிலர் ஆர்வத்தின் அடிப்படையில் மீள்பதிவிடுவதும் உண்டு. அது அறியாமல் அல்லது ஆர்வத்தால் செய்யப்படுவதாக கொள்ளலாம். ஆனால் நூற்றுக் கணக்கான தளங்கள் எம்மிடம் எந்த அனுமதியும் கோராமல் இப்பாடங்களை தொடர்ந்து பதிவுகளாக மீள்பதிவிட்டதன் நிலையிலேயே நாம் இத்தளத்தில் அடிப்பாகத்தில் (Footer) எமது பதிப்புரிமை அறிவித்தலை இடவேண்டி ஏற்பட்டது. சில தளங்கள் அனைத்து பாடங்களையும் தங்கள் பதிவுகளாக மீள்பதிவிட்டுக்கொண்டுள்ளன. இது நியாயமற்ற செயல்பாடுகள் ஆகும். எனவே மீள்பதிவிடுவதற்கான அனுமதியும் இல்லை. 

Q: வணிகநோக்கற்ற தொண்டு நிறுவனங்களில், மற்றும் வகுப்புகளில் இப்பாடங்களை பயன்படுத்த முடியுமா?

A: மேலுள்ள இரண்டு விடயங்களும் தவிர்ந்த நன்னோக்குடனான எந்த பயன்பாட்டிற்கும் இப்பாடங்களை தாராளமாகப் பயன்படுத்தலாம். நாம் தமிழர் நலன் சார்ந்தது தான் இப்பாடங்களை இங்கே இலவசமாக வழங்கி வருகின்றோம். ஆங்கிலம் கற்போர் வசதி கருதியே எளிதாக பிடிஎப் கோப்பு வடிவில் பதிவிறக்கிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே எம்மினம் நலன் பெறும் எந்த நன்னோக்கு திட்டத்திற்கும் இப்பாடங்கள் உதவியாக இருக்குமாயின் அவை எமக்கு உவப்பானதாகவே இருக்கும்.

About AANGILAM

Q: ஆங்கிலம் தளம் என்று துவங்கப்பட்டது?


Q: ஆங்கிலம் தளம் தனிநபருடையதாகுழுமத்தினருடையதா?

A: இத்தளத்தில் "நாம்", "எமதுபோன்று பன்மையில் விளிப்பதால் சிலர் இத்தளத்தை ஒரு குழுமப்பதிவாக கருதிவிடுகின்றனர் என்றே நினைக்கிறேன்சிலப் பின்னூட்டங்களும் அவ்வாறு உள்ளனஇருப்பினும் இத்தளம் ஒரு தனிநபரின் தன்னார்வ முயற்சியிலானது மட்டுமே ஆகும்.

Q: இந்த ஆங்கிலம் தளத்தின் நோக்கம் என்ன?

A: உலகெங்கும் உள்ள தமிழர் ஆங்கிலம் கற்றுயர வேண்டும் என்பதே எமது நோக்கம். "கடைக்கோடி தமிழனும் கற்க வேண்டும் ஆங்கிலம்!"

Q: மாதம் எத்தனை பாடங்கள் வழங்கப்படுகின்றன?

A: ஆரம்பத்தில் மாதம் அல்லது பாடங்கள் எனும் எண்ணிக்கை அளவில் வழங்கி வந்தோம்இருப்பினும் ஒரு பாடம் மட்டும் வழங்கப்பட்ட மாதங்களும் உள்ளன.

Q: ஆங்கிலப் பாடங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றனவா?

A: தொடர்ச்சியாக பாடங்கள் வழங்கி வந்தாலும்கடந்த 2011 மார்கழி மாதம் முதல் 2012 யூன் மாதம் வரை அரை ஆண்டுக்கும் மேலாக ஒரு பாடமேனும் வழங்க முடியவில்லை.

Q: தொடர்ச்சியாக மாதங்கள் பாடங்கள் ஏதும் வழங்கப்படாத நிலையில் வருகையாளர்களின் எண்னிக்கை எவ்வாறு இருந்தது?

A: தொடர்ந்து ஒரு தளத்தில் பல மாதங்களாக பதிவுகள் ஏதும் இடப்படாத நிலையில் வருகையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கடைசியில் புள்ளியை அடைந்துவிடும். (எனது ஏனைய தளங்களே அதற்கு சான்றுஆனால் இந்த "ஆங்கிலம் கற்பிக்கும்" தளத்தின் நிலை அதற்கு எதிர்மாறானதாகவே இருந்ததுபதிவிடப்படாத கடந்த மாதங்களின் வருகைகள் மாதம் 80,000 வரை தொடர்ந்து இருந்தனஇது ஒருபக்கம் எமக்கு ஆச்சர்யமாக இருந்தது., மறுப்பக்கம் தமிழர் ஆங்கிலம் கற்பதில் காட்டும் ஆர்வத்தினையும், இத்தளம் ஆங்கிலம் கற்போரை எந்தளவில் ஈர்த்துள்ளது என்பதையும் எமக்கு வெளிப்படுத்தியதுஅதுவே எமக்கு மேலும் பாடங்களை தொடர்ந்து வழங்க வேண்டும் எனும் உந்து சக்தியைக்கொடுத்துள்ளது.

Q: இந்த ஆங்கிலம் தளம் தொடங்கியக் காலக்கட்டத்தில் தளத்திற்கான வருகைகள் எவ்வாறு இருந்தது?

A: 2007 மார்கழி மாதம் இத்தளம் துவங்கிய முதல் மாதத்தின் மொத்த வருகைகள் 212 மட்டுமே இருந்தனஇங்கே எமது முதலாம் ஆண்டு பதிவைப் பார்க்கலாம்.

அப்போது நாம் எழுதும் பதிவுகளை தமிழ்வெளிதமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைத்தால் அத்திரட்டிகள் ஊடாக வருகைகள் கிட்டும். அதுவும் பதிவுகள் எழுதி திரட்டிகளில் இணைக்கும் நாட்களில் மட்டுமே கிட்டக்கூடியவை.  ஆனால் தொடர்ந்து ஒரு மாதம் பதிவிடாமல் விடப்பட்டதால் தமிழ்மணம் போன்ற திரட்டிகள் எமது தளத்தில் இருந்து திரட்டுவதை நிறுத்திக்கொண்டனஆனால் தமிழ்வெளி திரட்டி தொடர்ந்து தானியங்கியாக திரட்டியதுபின்னர் தமிழிஷ் அறிமுகமானக் காலப்பகுதியில் ஒவ்வொரு பதிவுக்கும் நூற்றுக்கணக்கான வருகையாளர்களை ஈர்த்துத் தந்ததுஇடையிடையே தமிழ்10 தளத்திலும் பதிவுகளை இணைப்பதால் அங்கிருந்தும் வருகைகள் கிடைத்தன. இருப்பினும் இது ஒருவகையில் திரட்டிகளை சார்ந்து அல்லது நம்பி பதிவிடும் நிலையாகவே இருந்தது. 

நண்பர் பிகேபி ஒரு முறை இவ்வாறு எழுதியிருந்தார், "ஒரு முறை வந்தவர் மீண்டும் நம் பதிவை தேடி வந்தால் அதுதான் உண்மையான வளர்ச்சி என்பேன்.”  ஆம்! அவ்வாறான ஒரு வளர்ச்சியை இத்தளம் ஆரம்பித்து சில மாதங்களில் அறிய முடிந்தது. உண்மையில் அந்த வளர்ச்சிக்கு நாம் மட்டும் காரணமல்ல; வலைப்பதிவர்கள், இணையத்தளங்கள், மன்றங்கள் என பலரதும் பங்களிப்பு இருந்தது.  பலரும் தமது தளங்களில் இருந்து இணைப்பு வழங்கத்தொடங்கினர். அதன் காரணமாக இத்தளம் பலரதும் புத்தகக்குறிக்குள்ளானது. எனவே வருகைகள் நேரடியாகவே கிடைக்கப்பெற்றனமேலும் பலர் இத்தளம் குறித்த பதிவுகளும் இட்டனர்வைகளே இத்தளத்தின் ஆரம்ப வளர்ச்சிப் படிகளாகின.

Q: தற்போது இதன் வளர்ச்சி எந்த நிலையில் உள்ளது?

A: இன்றைய நிலவரப்படி மாதம் (100,000இலட்சத்துக்கும் அதிகமான வருகைகள் இடம்பெருகின்றன.  இதுவரை (3,000,000மூன்று மில்லியனுக்கும் அதிகமான பக்கப்பார்வைகளை இத்தளம் பெற்றுள்ளது.  அத்துடன் 10,000 யிரத்திற்கும் அதிகமானோர் மின்னஞ்சல் கொடையம் ஊடாக பாடங்களை பதிவுசெய்து பெறுகின்றனர். இத் தரவுகளை தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் புள்ளிவிபர பொருத்திகள் ஊடாக காணலாம்இத்தளம் மாதாந்தத் தனிப்பயனர்கள் (Unique Users) 30,000 யிரத்திற்கும் அதிகமானோரை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் தொடர்ச்சியாக பாடங்களை வழங்கியிருந்திருந்தால் இதன் எண்ணிக்கை மேலும் பல்மடங்கு அதிகமானாதாயிருந்திருக்கும்.

Q: இனிவரும் நாட்களின் பாடங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுமா?

A: ஆம்பாடங்கள் தொடர்ச்சியாக வழங்கப்படும்பாடங்களை உடனுக்குடன் பெறவிரும்புவோர் ஓடை வசதியூடாக அல்லது மின்னஞ்சல் கொடையம் வசதியூடாக பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மேலே வழங்கப்படாக ஏதேனும் விடயங்கள் தொடர்பில் கேள்விகள் இருப்பின் பின்னூட்டம் இட்டோ, அல்லது எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புகொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
அருண் | HK Arun 


Download As PDF

13 comments:

successfull said...

hi sir,,,can i download fullbook in one link?
if yes please give me that link....
thanking you

prakash.j.j said...

hai sir,

i want children English story with tamil meaning pls.

regards,
ramprakash

jesuamalan said...

Respected Arun sir,
Congrats.Hail your love for OUR people.No match.I'm
thrilled by your answer.God bless your work.Tremendous it is.I look forward to the growth and maximum use of aangilam.The best.

jesuamalan said...

Amalan sir, a marvellous work is being done.A BIG applause on behalf of all my Tamil brethren.

Unknown said...

உங்களது இந்த ஆங்கில பாடங்கள் மிகவும் உதவியாக உள்ளது.... நன்றி,,,,

Unknown said...

மேன்மேலும் உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்,,,,,

shree said...

very very thanks sir. i am a housewife. my lifetime ambition is spoken english. still now i am very happy. so many thanks sir. i cannot go to class. because i have 2 children. your site is very useful for me. again i thank you sir

டார்வின் ( Darwin ) said...

திரு. அருண் உங்கள் எண்ணமும் அதை தொடரந்த செயலாக்கமும் பாராட்டுதலுக்குறியது மட்டுமல்ல அது வணக்கத்துக்குறியதும் கூட. தொடர்ந்து உங்கள் பாதையில் செல்க.. உங்கள் வலைப்பூவை பலருக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். தமிழ் வளர, தமிழன் உயர முதல் அடி இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம் அதை நீங்கள் செயலாக்கி கொண்டிருக்கின்றீர்கள் என் இதயம் கனிந்த பாரட்டுதலும் வணக்கமும். பக்கபலமாய் நிச்சயம் உங்கள் கூட வருவோம்.

டார்வின்

Unknown said...

hai sir how are you

துரைடேனியல் said...

மிக அருமையான முயற்சி. வாழ்த்துக்கள். புத்தகமாக வெளியிட்டிருந்தால் கூறவும். வாங்குவதற்கு ரெடி.

Unknown said...

புத்தகமாக வெளியிட்டிருந்தால் கூறவும்

MOHAMED AMEER said...

vgood

Unknown said...

I want start my english language..please give tips with practical life under married people condition.

Post a Comment